விருதுநகர் மாவட்டம்:-
மனிதனின் உயிர் விலை மதிக்கமுடியாத ஒன்றாகும் அதை பெரிதும் மதிக்காமல் இருக்கின்றனர் கொரோனா காலத்தில்…
சமீபகாலமாக கொரோனா தாக்கத்தினால் பணபலம் படைத்தோர் முதல் ஏழைகள் வரை பாரபட்சமில்லாமல் உயிரை பறித்துக்கொண்டு வருவது வேதனைக்குறியது.
சந்தர்பமும் சூழ்நிலையும் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும் அதிலும் தப்பி பிழைத்திருப்பது அவரவர் கையிலிருப்பதால் என்னவோ.
அருப்புக்கோட்டை நகர் முழுமையும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன ஒரு சில பகுதிகள் பேரிகார்டுகளால் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டுள்ளன பொதுமக்களின் பாதுகாப்பு கருதி.
அதையும் மீறி ஓரிரு வாகனங்கள் காவல் துறையினரின் காவலையும் மீறி திருட்டுதனமாக வலம் வருவதால் அவர்களை நிறுத்தி நகரின் குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா அவர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிரையும் எச்சரிக்கை செய்தும் அனுப்பி வருகிறார்.
அதிலும் சிலர் மருந்து மாத்திரை வாங்குவதற்கென்று இரண்டு அல்லது மூன்றுபேராக நடந்தும் வாகனத்தில் வருவதுமாக இருப்பதால் அவர்களை நிறுத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
எப்படிதான் விழிப்புணர்வில்லாத ஒரு சிலருக்கு எவ்வாறு கொரோனாவை பற்றி எடுத்துரைத்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை அதையும் பெரிதென எண்ணாமல் பொது மக்களின் நலனுக்காக காவல் துறை தம்முடைய பணியை காலம் பார்காமல் செயலாற்றுவது பெருமைக்குறியதே என்றால் மிகையாகாது.