சென்னைபெருநகர காவல்.
கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார்
இன்று 28.5.2021 காலை
கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஆயுதப்படை தலைமை காவலர்
திரு.சதீஷ் பாபு வ/49
த.பெ. ராஜகாந்தன்
எண்.12, FF பிளாக்
லூர்து கார்டன்.
கீழ்ப்பாக்கம்.என்பவர்கொரோனா தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப.அவர்கள் கீழ்பாக்கத்தில்உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் வழங்கினார்.
மேற்கண்ட தலைமை காவலருக்கு 14.05.2021-ம் தேதி கொரானா தொற்று ஏற்பட்டு Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது இல்லம் தேடி வந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காவல் ஆணையர்ஆறுதல் தெரிவித்தும் காவல்துறைசார்பில் மேலும் தொடர்ச்சியாக உதவிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஆயுதப்படை துணை ஆணையர் திரு சௌந்தரராஜன் உடன் இருந்தார்.







