Police Department News

நாங்களும் பாராட்டுகிறோம் ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை

நாங்களும் பாராட்டுகிறோம் ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை

மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக
திருச்சி மருத்துவமனையில் சேர்க்கிறார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும்
பலவீனமாக இருக்கிறார், உங்கள் மனைவிக்கு உடனடியாக B + இரத்தம் ஒரு யூனிட் தேவை எங்களிடம் இருப்பு இல்லை, யாரவது ரத்தம் கொடுப்பவரை அழைத்துவர
சொல்கிறார்கள், ஊரடங்கு செய்வதறியாது
மலைத்து திருச்சி வீதிகளில் நடக்கிறார்,
ஒரு காவலரிடம் சிக்குகிறார், ஊரடங்கு
நேரத்தில் வெளியே வரலாமா கண்டிக்கிறார்
காவலர், தனது நிலையை சொல்கிறார்
அந்த ஏழை கூலி தொழிலாளி, சற்றும்
யோசிக்காமல் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை விரைகிறார் காவலர்
இரத்தம் வழங்குகிறார், தாயும், சேயுமாய்
நலமாகிறது பிரசவம், ஏழை தனது
கண்ணீரை காவலருக்கு நன்றி
காணிக்கையாக்குகிறார், ஏழையை தட்டிக் கொடுத்துவிட்டு விடைபெறுகிறார் காவலர், செய்தி தீயாய் பரவி திருச்சி காவல் ஆணையர் கவனத்திற்க்கு செல்கிறது,
கமிஷனர் காவலரை பாராட்டி ரூ 25000
வழங்குகிறார், பெற்றுக் கொண்டு
பிரசவமான மருத்துவமனைக்குறிய பில்லை கட்டிவிட்டு மீதியை ஏழை கூலி
தொழிலாளியிடம் கொடுத்து சொல்கிறார்
பயப்பாட வேண்டாம் இறைவன் இருக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published.