உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம்.
காஞ்சிபுரம் சரக டிஐஜி முனைவர் பா. சாமுண்டீஸ்வரி
பழங்குடியின மக்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட நாகரிகம், கலாசாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என்று காலம் காலமாக பின்பற்றி, அதை சார்ந்து தங்களின் வாழ்க்கை தரத்தை அமைத்து வாழ்ந்து வருபவர்கள். மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் என வகைப்படுத்தப்பட்டு அறியப்படும் இவர்கள் தங்களுக்கு உரிய நிலத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டு இயற்கை சூழலில் வாழ பழகி கொண்டுஇருந்தாலும்
கொரோனாகாலத்தில்
இவர்களின் நிலைமை நினைத்துபார்க்கவே மிகவும் கொடுமையானது
அதன் வகையில்காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரமின்றி அவதிப்படும் பழங்குடி இன மக்களுக்கு
தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த குருவிமலை, செவிலிமேடு, பிள்ளையாா்பாளையம், ஒரிக்கை, பஞ்சுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரமின்றி பழங்குடியின ஏழைமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனா். இதையறிந்த காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பா.சாமுண்டீஸ்வரியின் உத்தரவின் பேரில், பழங்குடியின மக்களின் இருப்பிடங்களுக்கு காவல் துறையினா் நேரில் சென்று, கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா். மொத்தம் 59 பேருக்கு தலா ரூ. 2,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. பா.சாமுண்டீஸ்வரி குழுவினருக்கு நன்றி தெரிவித்தனா்
சரியான நேரத்தில் செய்த உதவி அதுவே இந்த உலகத்தைவிடவும் மிகப் பெரியது