அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் ஆணையர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் காவல் ஆளினர்களை கவச உடையுடன் சந்தித்து பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பூரண குணமடைய வாழ்த்தியும் மருத்துவ குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றி அறிவித்தார்
- இன்று 4.6.2021 பிற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறையினர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் குறைந்த அளவில் பாதிப்படைந்து தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு கோவிட் கேர்சென்டர் 360 படுக்கைகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் இணைந்து கடந்த 27.4 2021 முதல் இயங்கி வருகிறது இதில் 1055 காவல்துறையினர் அனுமதிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர் . இதுவரை 925 காவல்துறையினர் அவர்தம் குடும்பத்தினர் தொற்று குறைந்து சிகிச்சை முடித்து நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர் .
தற்சமயம் 82 காவல்துறையினர். அமைச்சுப் பணியாளர்கள்
அவர் தம்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரடியாக அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்குச் சென்று சமூக இடைவெளியுடன் கவச உடை அணிந்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பழங்கள் மற்றும் உலர் பழங்கள் உள்ள தொகுப்பினை வழங்கினார் மேலும் காவல்துறை
யினருக்கானகோவிட் கேர்சென்டரில் பணிபுரிந்து வரும் மருத்துவ குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து பழங்கள்வழங்கினார் இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையர்.E T சாம்சன்.(பொறுப்பு மைலாப்பூர் மாவட்டம்)மத்திய குற்ற�