மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
நேற்று 01.11.2019 மாலை 18.39 மணிக்கு பூக்கடை சரகம் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செல்வசேகரன்என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதின் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தவரை இன்று 02..11.2019 காலை 10.55 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தார். இவருடன் காவல் துணை ஆணையாளர் முனைவர்.திரு திருநாவுக்கரசு, இ.கா.ப அவர்கள் உடனிருந்தார்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.