தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் மீது வழக்கு.
30.11.2020. மதுரை மாவட்டம். ஒத்தகடை, மேலூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி நகர், அலங்காநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஏழு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும்,மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.




