Police Department News

தமிழக டி.ஜி.பி., யாக திரு. சைலேந்திரபாபு நியமனம். இன்று பதிவி ஏற்கிறார்

தமிழக டி.ஜி.பி., யாக திரு. சைலேந்திரபாபு நியமனம். இன்று பதிவி ஏற்கிறார்

தமிழக டி.ஜி.பி., திரிபாதி அவர்கள் இன்று ஓய்வு பெறும் நிலையில் புதிய டி.ஜி.பி., யாக சைலேந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., யாக இருப்பவர் திரிபாதி அவர்கள் இவர் இன்று புதன் கிழமை ஓய்வு பெறுகிறார்.

அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பிறகு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனத்திலும் சரி ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் நியமனத்திலும் சரி தலை சிறந்த அதிகாரிகளையை தேர்வு செய்து பணி அமர்த்தியுள்ளார். அந்த வகையில் திறமைமிக்க சைலேந்திரபாபுவை தமிழக காவல்துறையின் உயர்ந்த பதவியான டி.ஜி.பி., பதவியில் அமர்த்தி அவர் அழகு பார்த்துள்ளார். அவரது பதவி காலம் இரண்டாண்டுகள் ஆகும்

சைலேந்திரபாபு பன்முக திறமை வாய்ந்தவர் தலை சிறந்த தொழில் முறையிலான அதிகாரியாவர் சட்டம் ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி போலீஸ், பொதுமக்கள் நலத்தை பேணுவதிலும் சரி அவருக்கு நிகர் அவரே., நல்ல பேச்சாளர். இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி போதிய அதிகாரம் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்ட போதிலும் அவர் துவண்டு போகாமல் அதில் கூட அவர் சாதித்து காட்டியுள்ளார். தற்போது அவர் ரயில்வே டி.ஜி.பி., யாக பதவியில் உள்ளார்.

இன்று புதன் கிழமை பகல் 12 மணியளவில் சைலேந்திரபாபு அவர்கள் தமிழகத்தின் 30 வது டி.ஜி., யாக பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு திரிபாதி அவர்கள் விடை பெறுகிறார்.

இன்று மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதி அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.