Police Department News

தமிழ்நாடு காவல்துறை 1999 பேட்ஜ் உதவும் உறவுகள் சார்பாக மறைந்த காவலர் சையது முகமது அவர்களின் குடும்பத்தாருக்கு நிதி வழங்கப்பட்டது

தமிழ்நாடு காவல்துறை 1999 பேட்ஜ் உதவும் உறவுகள் சார்பாக மறைந்த காவலர் சையது முகமது அவர்களின் குடும்பத்தாருக்கு நிதி வழங்கப்பட்டது

மதுரை மாநகர் விளாச்சேரி பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சையது முகமது,இவருக்கு S. ரஷியாபானு, என்ற மனைவியும் S.முகமது தெளபிக், முகமது தாரிக், முகமது நிவாஸ் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.
இவர் தமிழ்நாடு காவல்துறைப்பணியில் 1999 ம் வருடம் சேர்ந்து பணிபுரிந்து வந்தார் இவர் இறுதியாக மதுரை, திருநகர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் இவருக்கு உடல்நல குறைவு காரணத்தால் 6/5/21 அன்று காலமானர் இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 1999 ம் பேட்ஜ் சக பயிற்சி காவலர்கள் உதவும் உறவுகளுக்குமட்டும் உதவும் உள்ளத்தோடு பணி காலத்தில் எதிர்பாராத விதத்தில் ஏற்படும் உயிரிழப்பால் மறைந்த சக பயிற்சி காவலர் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்திலிருந்தும் 2817 நபர்கள் 1999 ம் ஆண்டு காவலர் பயிற்சியில் சேர்ந்தவர்கள் மூலம் 14,76,120/= பதினான்கு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து நூற்றி இருபது ரூபாய் நிதி திரட்டி மேற்படி நிதியிலிருந்து கீழ்கண்டவாறு தொகையை பிரித்து
சையது முகமது அவர்களின் மனைவி ரஷியாபானு அவர்களுக்கு ரூ.3,50,000/− ம், சையது முகமது அவர்களின் மகன்கள் முகமது தெளபிக் அவர்களுக்கு ரூ.3,50,000ம், முகமது தாரிக் அவர்களுக்கு 3,50,000/− ம், முகமது நிவாஸ் அவர்களுக்கு 3,50,000/− ம் கொடுக்கப்பட்டது.

இந்த நிதி வழங்கும் விழா கடந்த 27 ம் தேதி நடைபெற்றது, இதில்
போக்குவரத்து காவல் ஆய்வாளர். திரு.நந்தகுமார். தலைமைக்காவலர்கள்.முத்துப்பாண்டி, சின்னையாகணேசன்,ராஜ்குமார்,மணிக்குமார்,சேவாக்,பழனிக்குமார்,சிவக்குமார்,முத்துமணி,மகாலிங்கம், அண்ணாத்துரை,ரவிச்சந்திரன்,ரபீக்அகமது , ரமேஷ்,மற்றும் K.V.S.பாண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.