ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிடிபட்ட 8 அடி நீள சாரை பாம்பு, லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்
பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் நவீன்கிருஷணன் வயது 32, இவர் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இவர் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இவர் வீட்டுக்கு வெளியில் உள்ள பாத்ரூம் பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு உடனடியாக அவர் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாத்ரூமிற்குள் இருந்த 8 அடி நீள சாரைப்பாம்பை லாவகாமாக பிடித்து சாக்கில் போட்டு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.