Police Recruitment

தேனி மாவட்டம் 31.10.2019 தேனி மாவட்ட காவல் துறை சார்பாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி “தேனி காவலன்” எனும் பெயரில் புதிய செயலி (Android Application -play store – Theni kavalan) உருவாக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் 31.10.2019
தேனி மாவட்ட காவல் துறை சார்பாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி “தேனி காவலன்” எனும் பெயரில் புதிய செயலி (Android Application -play store – Theni kavalan) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் தற்போது தேனி மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை எடுத்து பயன் பெறலாம்.
மேலும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது அதன் விபரத்தை தேனி காவலன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் விபரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உங்களது வீடு காவல்துறையினரால் கண்காணிக்கப்படும்.
மேலும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் குற்ற சம்பவங்கள், வாகன விபத்துக்கள் போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேனி காவலன் செயலி மூலம் அனுப்புவதால் காவல்துறையினரால் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றங்கள் தடுக்கப்படும்.

  • “You Tube channel” Theni district police எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது இதன்மூலம் தேனி மாவட்ட காவல் துறை சார்பாக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்த You Tube Channel மூலம் பார்த்து பயன் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.