இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி அவர்களின் ஹெல்மெட் விப்புணர்வு..!!
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.செந்தில் குமார் அவர்களின் அறிவுரைகளின் படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி அவர்கள் காவலர்
,பா.கண்ணன், சி பாலா சண்முகம் ஆகியோர் தலைமையில் ஹெல்மெட் விப்புணர்வு செய்தனர்.
தலைக்கவசம் உயிர்க்கவசம், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், என்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்,
ஹெல்மெட் அணிய வேண்டும், ஹெல்மெட் அணிவது உயிருக்கு பாதுகாப்பானது என தெரிந்தும் சிலர் பின்பற்றுவதில்லை.
ஹெல்மெட் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம். இதே தவறை 2வது, 3வது முறை செய்தால் தலா 300 அபராதம். தவறு தொடர்ந்தால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யவும் சட்டத்தில் வழி உள்ளது.
டூவீலர் ஓட்டுபவர்கள் மட்டுமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதே தவறான சிந்தனை. தலை இருக்கும் எல்லோருக்கும் ஹெல்மெட் அவசியம். விபத்து நடக்கும் போது தலையில் அடிபடாமல் காக்கிறது. தலையில் அடிபடும் போது காயம் ஆறினாலும் மூளையில் வடுவாக மாறி ஊனமாகி விடும். மூளை என்பது ஜெல்லி போன்றது. அதை பாதுகாக்க கடினமான மண்டையோடு, அதன்மேல் தடித்த தோல், அதற்கு மேல் தலைமுடி என இயற்கையே மூளைக்கு கவசம் அணிவித்திருக்கிறது.விபத்துகள் இப்போது பெருகிவிட்டதால் இயற்கை கவசத்தை தாண்டி ஹெல்மெட் அணிவது கட்டாயம். அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டஹெல்மெட் அணிந்தால் விபத்தின் போது தலையில் அடிபடாமல் தப்பிக்கலாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு செய்தனர்.