Police Department News

போரூர் பகுதியில் போக்குவரத்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி சென்ற நபரை மீட்டு 3 குற்றவாளிகளை கைது செய்த SRMC போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினர்

போரூர் பகுதியில் போக்குவரத்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி சென்ற நபரை மீட்டு 3 குற்றவாளிகளை கைது செய்த SRMC போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினர்

சென்னை பெருநகர காவல் T-15, SRMC போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர்கள், P.லிங்ககுமார், (த.க.35800), மற்றும் M.பேச்சிமுத்து (த.க.26828), ஆகியோர் கடந்த 6 ம் தேதி இரவு 9.30 மணியளவில் போரூர் செட்டியார அகரம் சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த TN 12 AF 1983 என்ற பதிவெண் கொண்ட swift Tour காரிலிருந்து ஒருவர் போலீசாரை பார்த்ததும் காப்பாற்றுங்கள் என கூறி கத்தியுள்ளார் உடனே சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர்கள் இருவரும் மேற்படி காரை மடக்கிபிடித்து வழி மறித்து உள்ளே இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர் ரியாஸ்அலி வயது 39/21, த/பெ.சையது இப்றாஹிம், மாங்காடு பட்டூர் பகுதியை சேர்ந்தவர், இவர் பரணிபுத்தூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மேற்படி காரில் வந்த 3 நபர்கள், ரியாஸ் அலியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே கடத்தல்காரர்களை பிடித்து கைது செய்து கடத்தப்பட்டவரை காப்பாற்றினார். கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் செய்து T-15 SRMC காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் குற்றம் நடந்தது T14 மாங்காடு காவல்நிலைய சரகத்திற்குட்பட்டது என்ற காரணத்தால் மூவரையும் T.14 -மாங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

T 14 மாங்காடு காவல்நிலைய ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ராஜா வயது 31/21, த/பெ. கோபால், காளையாபட்டியை செர்ந்தவர். சுரேஷ் வயது 38/21, த/பெ. தேவராஜ், சென்னையை சேர்ந்தவர். சரவணன் வயது 48/21, த/பெ. மாரிமுத்து, சென்னையை சேரந்தவர். என தெரியவந்தது அவர்களிடமிருந்து கத்தி இரும்புராடு, செல் போன், கார் ஆகியவைகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் ரியாஸ்அலி தன் நண்பனான தர்மராஜ் என்பவரிடமிருந்து 30,000 கடனாக பெற்ற ரூபாயை திரும்பத்தரவில்லை ஏன தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் தன்னுடைய நண்பர்களான ராஜா,சுரேஷ்,சரவணன் ஆகியோர்களின் உதவியுடன் அவரை மிரட்டியதாக தெரியவந்தது. எனவே மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர், தலைமறைவாக உள்ள தர்மராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

பணியில் விழிப்புடன் இருந்து செயல்பட்டு கடத்தல்காரர்கள் 3 பேரையும் பிடித்து கொடுத்த தலைமை காவலர்கள் லிங்ககுமார் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி கெளரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.