வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
மதுரை மாநகரில், செல்லூர், தல்லாகுளம், திருப்பாலை, டி.வி.எஸ். நகர், கரிமேடு, தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல், புதூர் மற்றும் கூடல்புதூர், ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் திரு.ராஜசேகரன் IPS.,(குற்றப்பிரிவு) அவர்களின் நேரடி பார்வையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தல்லாகுளம் சரக குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ரவி, மதுரை நகர் சரக குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ரமேஷ் மற்றும் ஆய்வாளர்கள் திரு. சங்கர், திரு. கனேசன், ஆகியோர்களின் தலைமையின் கீழ் தனிப் படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன், மதுரை மாநகரில் பூட்டியிருந்த வீடுகளை கொள்ளையடித்த 15 வழக்குகளில் தொடர்புடையவன் என தெரிய வந்தது. அதே போல் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்குமார் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து 7 வழக்குகளில் தொடர்புடையது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 22 வழக்குகளில் தொடர்புடைய சுமார் 53 லட்சம் மதிப்புள்ள 143 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய உதவியாக இருந்த தனிப்படையினர் சார்பு ஆய்வாளர் திரு. சுந்தரேஷன், திரு. அபிமன்யு, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.கதிர்வேல், திரு. கோட்டை முனியாண்டி, திரு. கனேசன், திரு. சேகர் தலைமை காவலர்கள் திரு. கருப்பையா, திரு சலேத்ராஜ், ஆகியோர்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா,மற்றும் துணை ஆணையர் குற்றப்பிரிவு திரு. ராஜசேகரன் IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.