Police Recruitment

லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!!

லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!!

லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!!

பெங்களூர் காவல் துறையினர் இன்று அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோத கும்பலை அதிர்ச்சியுற வைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஊரடங்கு காலங்களில் பெருவாரியான குற்றங்கள் குறைந்து இருந்தாலும், குடும்பங்களுக்குள் ஏற்படும் மறைமுக வன்முறைகள் அதிகரித்து இருந்தது. செயின் பறிப்பு, வழிப்பறி, கொலை, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் ஊரடங்கில் குறைந்திருந்த நிலையில், குடும்பங்களுக்குள் நடைபெறும் பிரச்சனைகள் தொடர்பான புகார்கள் அதிகளவு வந்தது என பெங்களூரு காவல் துறையினர் தகவல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முதலாக பெங்களூர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பெங்களூரில் உள்ள ரவுடி வட்டாரங்கள் அனைத்தும் பீதியில் உறைந்து இருக்கிறது. சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஊரடங்கால் குறைந்திருந்த வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததால், காவல் துறையினர் பிரத்தியேக பட்டியல் தயாரித்து ரவுடிகளை கைது செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 5 மணியில் இருந்து பெங்களூரில் உள்ள ரவுடிகள், அவர்களின் வீடுகளிலேயே நேரடியாக சென்று கைது செய்யப்பட்டு வருகின்றனர். பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள காமக்ஷிபல்யா மற்றும் பைதரஹள்ளி பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று காவல் துறை அதிகாரிகள், அங்கிருந்த தேடப்படும் மற்றும் முக்கிய ரவுடிகளின் பட்டியலில் உள்ள 76 பேரை அதிரடியாக கைது செய்தனர். காவல் அதிகாரிகளின் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத ரவுடிகள் மொத்தமாக கூண்டோடு சிக்கிக்கொண்டனர்.

இதனைப்போன்று, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் பரப்பன அஹ்ரகார சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதிகாலை 5 மணியளவில் மோப்ப நாய்களின் உதவியுடன் நடைபெற்ற சோதனைகளில் கைதிகள் சட்டவிரோதமாக உபயோகம் செய்த கத்தி, சிகிரெட், செல்போன், பணம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் இன்று நடத்திய திடீர் ஆய்வுகள் மற்றும் கைது நடவடிக்கைகள் சட்டவிரோத கும்பலிடையே அச்ச உணர்வை ஏற்படுத்திஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published.