திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் திருடிய திருடர்கள் கைது, 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 முகமூடி கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி சக்திமுருகன் தெருவில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் அருந்ததி வயது 55/21, இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், இவரது கணவர் பழனி வயது 57,/21, இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இவர் வீட்டின் வெளிபுற கதவை பூட்டி விட்டு காற்றிற்காக உள்பக்க கதவை திறந்து வைத்து விட்டு கணவன், மனைவி இருவரும் தூங்கி கொண்டாருந்தனர். இவர்களது ஒரே மகன் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த 3 நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி தாங்கள்
கொண்டு வந்த கல்லால் பழனியை தாக்கி இரத்த காயம் ஏற்படுத்தி அருந்ததி அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின் மற்றும் பீரோவிலிருந்த 17 பவுன் தங்க நகைகயை கொள்ளையடித்து சென்றனர்.இது தொடர்பாக பழனி தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொள்ளையர்களை பிடிப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்களின் உத்தரவின்பேரில் திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி., சுகுமாரன் மற்றும் நிலக்கோட்டை டி.எஸ்.பி.,முருகன் அவர்களின் மேற்பார்வையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன், தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சேக்தாவூத், பொன்குனசேகரன், கண்ணதாசன் மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். அவர்கள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கிடைத்த ரகசிய தகவலின்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட காமாக்ஷிபுரத்தை சேர்ந்த செல்வம், மகன் சந்தோஷ் வயது 22/21, அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் வயது 26 மற்றும் தேனி வீரபாண்டியை செர்ந்த அய்யப்பன் வயது 20/21,ஆகியோர்களைகைது செய்து விசாரணை செய்தனர். அவர்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை தாடிக்கொம்பு, மற்றும் தாலுகா காவல்நிலையத்திற்குஉட்பட்ட 17 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 53 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது, அதன்பின் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.