காவலர் நாகநாதன் ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவலர் நாகநாதன், வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் நமது தாயகத்திற்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களம் இறங்குகிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்
இது நமக்கு பெருமை தேடி தரும் ஒன்று. இது போன்று நமது மாவட்டத்தில் கணக்கிட்டு பார்த்தால் இலை மறை காயாக எத்துணையோ இளைஞர்கள் பெண்கள் தாங்கள் திறமைகளை வெளிக்கொணர முடியாமல் அவர்கள் தாங்கள் முயற்சிகளை மூட்டை கட்டிவிட்டு மேலும் பயிற்சிகளை தொடரமுடியாமல் அவர்களின் கனவுகள் நனவாகாமல் போய் வருகின்றதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
இவர்கள் நிலை
போதிய அடிப்படை வசதிகள்,அதற்குண்டான பயிற்சிகள்,மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களினுள் மறைந்திருக்கும் திறமைகளை கொண்டுவருவதற்கான முகாந்திரம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பின் தள்ளபடுகிறார்கள்.
இவர்களை வெளிக்கொண்டு வர நமது தமிழக அரசும்,தன்னார்வ தொண்டு அமைப்புகளும்,
சமூக மக்களும் ஒன்று சேர்ந்து இந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று விளம்பரங்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகள், பயிற்சிக்கான திறமையான ஆசிரியர்கள், அவர்களுக்கு தேவையான சர்வதேச அடிப்படையில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், ஆடைகள் கொடுத்து அவர்களை முன்னுக்கு கொண்டு வந்தோம் என்றால் மாவட்டத்தில் அதிகப்படியான வீரர்களை உருவாக்க முடியும்.
இந்த மாவட்டத்தில் மீன்பிடிதொழில், விவசாயம் செய்யும் இவர்களுக்கு இயற்கையாகவே உடல் தகுதியுடன் கூடிய தன்னம்பிக்கை இயற்கையாகவே அமைந்துள்ளது.
இன்றைய நிலையில்
இதை போன்ற அதிகப்படியான மாணவர்கள், இளைஞர்களுக்கு பள்ளிக்கூடங்களில் இருந்து கூட விழிப்புணர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. மேலும் இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஊக்குவிக்க படாமல் போனதால் இவர்கள் சிறுவயதில் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி , கையடக்க பேசி மூலம் வலைதளங்களில் காலத்தை செலவழித்து இளமையை தொலைத்து வருகின்றனர் இந்த நிலைமையை மாற்ற இவர்களுக்கு நல்ல ஸ்போர்ட்ஸ் கிளப்புகளை ஆங்காங்கே உருவாக்க வேண்டும், நல்ல திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவது என்பது அனைவரின் கனவாக இருக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு கடந்த வருடங்களாக கீழக்கரையில் உள்ள பிரதானமான ஹமீதியா மேல்நிலை பள்ளி கூட மைதானத்தை விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி செய்வதற்காகவும் தகுந்த ஏற்பாடுகளை உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் செய்து வருகிறது.
இதுபோல பெண்களில் உடற்பயிற்சி, விளையாட்டு வீரர்களை உருவாகவேண்டும் என்ற பெரிய முயற்சி எடுத்து
பெண்களுக்கான விளையாட்டு மைதானத்தை PSM ஸ்போர்ட்ஸ் சென்டர் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி PSM ஹபீபுல்லா கான் அவர்கள் நடத்தி வருகிறார்கள் இதன் மூலம் தினமும் 25 முதல் 30 பேர் திறமையான பெண் பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது