Police Recruitment

பழனி, தனியார் விடுதியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

பழனி, தனியார் விடுதியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்

பழனி தனியார் விடுதியில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ள கேரளப் பெண், விடுதி உரிமையாளரிடம் பணம் பறிப்பதற்காக இது போன்று கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,விஜயகுமாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 வயது பெண் தன்னை பழனியில் 3 பேர் கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கேரள மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 19 ம் தேதி கேரளத்தை சேர்ந்த தர்மராஜ், 40 வயது பெண் ஒருவருடன் பழனி தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்,
அன்று இரவு முழுவதும் இருவரும் மது போதையில் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து விடுதி உரிமையாளர் அவர்களை வெளியேற்றிய பிறகு , 25 ம் தேதி வரை இருவரும் பழனி திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை, தர்மராஜ் பணம் பறிக்கும் நோக்கில் கேரள காவல்துறை பெயரை பயன்படுத்தி விடுதி உரிமையாளரை மிரட்டியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தர்மராஜின் சகோதரியிடம் மேற்கொண்ட விசாரணையில் தர்மராஜுடன் தங்கியிருந்த பெண் அவரது மனைவி அல்ல என்ற விபரம் தெரியவந்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பெண் மீது கூட்டு பாலியில் பலாத்காரம் நடந்ததற்கான எவ்வித உடல் காயங்களும் இல்லை என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழக காவல்துறை சார்பாக திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., சந்திரன் அவர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் கேரளத்துக்கு விரைந்துள்ளன. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் 164 பிரிவின் கீழ் கேரள போலீசார் நடத்திய ரகசிய விசாரணை ஆவணங்கள் மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை தமிழகப் போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்றார். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப்பிரியா பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்

சந்தேகத்தை ஏற்படுத்திய முக்கிய விசயங்கள். பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்பட்ட நாளுக்கு பிறகும் அப்பெண்ணுடன் தர்மராஜ் பழனியில் பல இடங்களிலும் சுற்றித்திரிந்துள்ளார். பழனிக்கு ஆன்மீக பயணம் வந்ததாக தர்மராஜ் கூறியிருக்கிறார் ஆனால் அவர்கள் கூறும் தேதியில் கோவில்கள் திறக்கவே இல்லை, அவ்வாறிருக்க அவர்கள் ஆன்மீக பயணம் வந்தது எப்படி?

அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது மருத்துவப் பரிசோதணையில் தெரியவரவில்லை. இது”போன்று பல அடிப்படை கேள்விகளே புகார் கொடுத்ததின் பின்னனியில் இருக்கும் முக்கிய கேள்விகளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.