Police Recruitment

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறிய திருட்டுக்கள்

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறிய திருட்டுக்கள்

தேனி மாவட்டத்தில் சிறு சிறு திருட்டுக்கள் அதிகரித்து வருவதால் காவல்துறைக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது,

இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வழங்கப்பட்டு வரும் தளர்வுகளால் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது கொரோனா சூழல் பல் வேறு வாழ்கையை புரட்டி போட்டுள்ளது இதில் புதியவர்கள் பலர் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது காவல்துறை மத்தியில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் சிறு ஓட்டல்கள், சிறு வணிக நிறுவனங்களில் வெளிச்சத்திற்காக எல்.இ.டி. பல்புகள் நிறைய மாட்டி வைத்துள்ளனர். இந்த பல்புகள் ஒவ்வொன்றும் 1000− ரூபாய் விலை கொண்டவை, இந்த பல்புகளை
ஒரு தரப்பினர் குறி வைத்து திருடியுள்ளது. குறிப்பாக தேனி சமதர்புரத்தில் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு மாட்டப்பட்டிருந்த பல்புகள் காணாமல் போயுள்ளன அதே போல் தேனியில் புதிய குடி நீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகளில் பித்தளை, காப்பர் வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் குடிநீர் இணைப்புகளும் வீடுகளுக்கு வெளியே தான் இணைக்கப்பட்டுள்ளன, இப்படி இணைக்கப்பட்டு வீடுகளுக்கு வெளியே உள்ள குழாய் இணைப்புகளில் உள்ள பித்தளை காப்பர் வளையங்களை மட்டும் திருடி சென்றுள்ளனர். தேனியில் மட்டும்தான் இந்த நிலையா என போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தியுள்ளனர் போடி, கம்பம், சின்னமனூர் உத்தமபாளையம் ஆண்டிபட்டி, பெரியகுளம், உட்பட பல நகர் பகுதிகளிலும் இதே சிக்கல் இருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது, பல்ப், அலுமனிய வளையங்கள் போன்ற சிறு திருட்டுகளுக்காக போலீசிடம் போக வேண்டாம் என மக்கள் நினைத்து புகார் செய்யவில்லை ஆனாலும் இந்த விசயத்தை உளவுத்துறை போலீசார் மூலம் அறிந்து கொண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் வழக்கம் போல் பீட் பிரித்து அனைத்து நகர் மற்றும் கிராமங்களில் இரவு ரோந்து பணியைதொடங்க உத்தரவிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.