Police Recruitment

மாவோயிஸ்ட்களின் ஆயுத பயிற்சியாளர் கைது

கோவை

மாவோயிஸ்ட்களின் முக்கிய ஆயுதப் பயிற்சியாளரான சத்தீஸ் கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக், தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸாரால் ஆனைகட்டி அருகே நேற்று கைது செய்யப்பட்டார்.

தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள அகழி, அட்டப்பாடி உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருந்து வருகிறது.

பாலக்காடு மாவட்டம் அட்டப் பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி கேரள அதிரடிப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மறுநாள் நடை பெற்ற சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப் பட்டார். துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தின் அருகே மாவோயிஸ்ட்கள் தற்காலிக கூடாரம் அமைத்து இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து மருந்து, மாத்திரைகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சண் டையின்போது சந்து என்ற தீபக்கும், மற்ற இரண்டு மாவோயிஸ்ட்களும் காயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். எனவே, அவர்கள் தமிழகத்துக்கு தப்பி வர வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்ட னர்.

இந்நிலையில், தமிழக சிறப்பு அதிரடி படையினர் (எஸ்டிஎஃப்) ஆனைகட்டி அருகே மூலக்கண் பகுதியில் நேற்று சோதனை நடத்தி வந்தனர். அப்போது, அதிரடிப் படையினரைக் கண்ட மாவோயிஸ்ட் பிரிவுக்கு முக்கிய ஆயுதப் பயிற்சி அளித்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் தீபக் (30), தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை அதிரடிப்படையினர் துரத்திப் பிடித்தனர்.

அப்போது தீபக்குக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற் காக நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.