Police Recruitment

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கடும் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு கடன் கொடுத்த நபர்கள், கடன் பெற்ற பொதுமக்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதே போன்று பல தனியார் நிறுவனங்களும் செயல்படுவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மத்தியபாகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமறைவாக உள்ள எதிரிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களை கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்கள். பொதுமக்களின் உயிருக்கும், அவர்களது உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது காவல்துறையின் தலையாய கடமையாகும். இதுபோன்று கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.