.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இரு பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் உடனே விரைந்து சென்று சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு இருவருக்கும் போலீசார் அறிவுரைகள் வழங்கினார்கள். அதன்பின் அவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்கள். மேலும் மாணவர்கள் அவர்களது தவறை உணர வேண்டும், இதுபோன்ற செயல்பாடுகளில் வருங்காலத்தில் ஈடுபடக் கூடாது. என்பதால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குறளையும் ஒருமுறை எழுத வேண்டும் என பாளையங்கோட்டை ஆய்வாளர் திரு.தில்லை நாகராஜன் அவர்கள் பள்ளிகளில் கேட்டுக் கொண்டதின் பேரில் 1330 திருக்குறளையும் மாணவர்கள் எழுதி 06.11.2019ம் தேதியன்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாளைங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.தில்லை நாகராஜன் அவர்களின் நூதன தண்டனையால் மாணவர்களை நல்வழிப்படுத்தும்.