மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை, K.V.சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெருவில் வசிக்கும் ஆண்டியப்பன் மகன் சங்கர் கனேஷ் வயது 41/21, இவர் தனது சொந்த வேலை சம்பந்தமாக கடந்த 27 ம் தேதி காலை 8 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில், 50 அடி ரோடு சந்திக்கு் இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னாடி வந்த நபர் அவரை வழி மறித்து கத்தியை காட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி அவர் சட்டை பையிலிருந்த 400 ரூயாயை வழிப் பறி செய்ய முயற்சித்துள்ளார் உடனே அவர் சத்தபோடவே அக்கம் பக்கத்திலிருப்போர் ஓடி வந்து செல்லூர் D2, காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து வழிப் பறி செய்ய முயற்சித்த நபரை விசாரித்ததில் அவன் மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி 7 வது தெருவை சேர்ந்த ஜெயமணி மகன் ஜெயசந்திரன் என்ற ராசுக்குட்டி வயது 28/21, என தெரிய வந்தது, அவனை கைது செய்து நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், நீதிபதியின் உத்தரவின்படி அவன் சிறையில் அடைத்தனர்.