
ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி
வாராந்திர கவாத்து பயிற்சியில் கைதுப்பாக்கி, Gasgun , Grenades, கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது
இன்று (05.04.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்), திரு. இராமச்சந்திரன் (DCRB), திரு.ரமேஷ்ராஜ் (DCB), திரு.வெங்கட கிருஷ்ணன் (IUCAW), திரு.சிவராமஜெயன் (மாவட்ட ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
