Police Department News

J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

08 .08 .2021 இன்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையிலும் அவருடைய அறிவுறுத்தலின்படியும் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN )அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் 21வது தெருவில் இருக்கும் பூங்காவை தத்தெடுத்து பூங்காவில் உள்ளே இருக்கின்ற இடத்தை சுத்தம் செய்கின்ற பணியையும் மரக்கன்றுகள் நட்டு தினம் தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டள்ளனர்.
இப்பணியின் மூலமாக தேவையற்ற நபர்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்த இந்த பூங்காவை மீட்டு மீண்டும் சிறுவர்கள் விளையாடும் பூங்காவாகும் முதியோர்கள் நடைபயிற்சிக்கு பயன்படும்படியாகவும் செயல்படும் என்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் கூறினார்.
அதுமட்டுமன்றி அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் திரு.கோபி
Rotary Community Corps Blue Waves Ch TN 3232 அவர்கள்
பெசன்ட் நகர் 16 வது குறுக்கு தெரு சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டும் இப்படி அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து இயற்கை சுவாசத்தை நாமே உருவாக்கலாம் என்ற விழிப்புணர்வையும் அங்கிருந்த மக்களுக்கு ஏற்படுத்தினார். இப்படி பட்ட நன்மையான
இச்செயல்களை காவல்துறை உயர் அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.