விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளி சாலையில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.
கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா குறித்த அச்சம் சிறிதுமின்றி அருப்புக்கோட்டையில் முக்கவசம் அணியாமல் ஏராளமானோர் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளி சாலையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா பாதிப்பு குறித்தும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் மூன்றாம் அலை வராமல் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறினர்.
பின்னர் அவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர். மேலும் அவர்களுக்கு முககவசங்களையும் இலவசமாக வழங்கினர்.
தொடர்ந்து அரசின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.