Police Department News

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம் அருகே 85 லட்சம் மதிப்புள்ள எரி சாராய கேன்கள் பறிமுதல்.… இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு!!!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம் அருகே 85 லட்சம் மதிப்புள்ள எரி சாராய கேன்கள் பறிமுதல்.
இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரவணமூர்த்தி, ஆய்வாளர், மணி தலைமை காவலர் குமரன், ஆகியோர் கலவை செய்யார் ரோட்டில் உள்ள கண்ணிகோயில் தரைப்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் பேரில் கலவையில் இருந்து செய்யாறு நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா பிக்கப் வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் ஒருவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வண்டியை சோதனை செய்தபோது அதிலிருந்து 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 3500 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி அவர்களின் மேற்பார்வையில் மதுவிலக்கு பிரிவு இரண்டு காவல் ஆய்வாளர்கள் ஐந்து உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மத்திய புலனாய்வு பிரிவு உதவியுடன் திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த செய்யாதுவண்ணம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கலவை அருகே உள்ள செய்யாதுவண்ணம் கிராமப்பகுதியில் சேர்ந்த பத்மாவதி நகர் என்ற இடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 35லிட்டர் கொள்ளளவுள்ள 397கேன்களில்397+35 13,895லிட்டர் 100+35=3500லிட்டர் ஆக மொத்தம் 497கேன்களில் 17,395லிடடர் ஏரிசாராயத்தை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததை தனிப்படை முலம் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு தொடர்ந்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது.எரிசாராய கேன்களில் மதிப்பு 77,00,000மற்றும் வழக்கில் பிடிப்பட்ட வாகனத்தின் மதிப்பு 8,00,000 ஆக மொத்தம் 85,00,000 இலட்சம் ஆகும். மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு காவல் துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். உடன் வேலூர் கோட்ட டி.ஐ.ஜி. ரவி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published.