Police Department News

பழனியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம்

பழனியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம்

கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம வனக்குழு மக்களை தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் மற்றும் பிரேம்நாத், ஜெயசீலன், வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர். இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.

மேலும் காற்று மாசினை தடுக்கும் விதமாக தேக்கந்தோட்டம் வன சோதனை சாவடியிலிருந்து வருகிற ஜூன் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மிதிவண்டி வைத்திருப்போர் பழனி வாழ் மக்கள் ஒன்றிணைந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நெகிழிகளை அகற்ற ஒன்று சேருமாறு பழனி வனச்சரத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.