நீதி மன்றக் காவல் என்றால் என்ன?
நீதிமன்றக் காவல் என்றால் சிறையில் அடைப்பது. அப்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஒருவரை காவலர்கள் விசாரணை செய்ய முடியாது.
அப்படிச் செய்ய வேண்டும் என்றால், காவலர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென நிதிபதியிடம் மனுத் தாக்கல் செய்து, அதனை ஏற்று குறிப்பிட்ட சில நாட்களுக்கு அனுமதி வழங்கினால், அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளிக் கொண்டு வந்து விசாரிக்க முடியும்.
இவ்விசாரணை முடிந்தப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். பின் நிதிபதி சிறையில் அடைக்க உத்தரவிடுவார் அல்லது தேவையைப் பொறுத்து மீண்டும் சில நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்குவார்.
மொத்தத்தில் நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரை, நீதிமன்றத்துக்கு வரவழைத்தோ அல்லது தானே சிறைக்கு சென்றோ ஒரு நிதிபதிதான் விசாரிக்க முடியுமே தவிர, காவலர்கள் உள்ளிட்ட வேறு எவரும் விசாரிக்க முடியாது.