நீதி மன்ற சாசனமாம் சாட்சிய சட்டத்தின் மகத்துவம்
மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளில் பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர் அவரது வழக்குகள் பெரும்பாலும் தேல்வி அடைந்ததில்லை காரணம் அவர் நியாயமான வழக்குகளை மட்டும் தான் எடுத்து நடத்துவார், மேலும் வழக்கறிஞர் தொழில் ஒரு சேவைத் தொழில் என்பதை உணர்ந்து அதிக கட்டணம் வாங்குவதில்லை, இருந்த போதிலும் அந்த தொழில் மூலம் கிடைத்த வருமானம் அவருக்கு திருப்திகரமாக உள்ளதாகவே கூறியுள்ளார்.
நீதி மன்ற சாசனமாம் சாட்சிய சட்டம் சாட்சிய சட்டம் பற்றி மகாத்மா காந்தி அவர்கள் தான் எழுதிய சத்திய சோதனை நூலில் கூறியிருப்பதாவது, சட்டங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சாட்சிய சட்டத்தில் ஓரளவு தெளிவுண்டு என்று சொல்லி இருக்கிறார்.
அப்படியானால், சாட்சிய சட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், நாட்டுக்கு நாடு சட்டங்களும், உரிமைகளும், தண்டனைகளும் வேறு படலாம். ஆகையால், உண்மையை கண்டு பிடிக்க இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை
ஆனால், சாட்சியம் என்றால், அது எல்லா நாட்டிலும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். நாம் வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு நமது வழக்கு சம்பந்தப்பட்ட சட்டங்களுடன் சாட்சிய சட்டத்திலும் நமக்கு தெளிவு வேண்டும், தற்போது வழக்குகளில் பொய் வழக்குகள்தான் அதிகம் என்பதை மறுக்கமுடியாது. சாட்சிய சட்டத்தின் மூலமாகத்தான் பொய் வழக்குகளை உடைத்து வெளிவர முடியும்.