Police Department News

மதுரை, வளர்நகர் பகுதியில் குட்கா பதுக்கியிருந்த இருவர் கைது. மாட்டுத்தாவணி E 5, காவல்நிலையம் போலீசார் நடவடிக்கை

மதுரை, வளர்நகர் பகுதியில் குட்கா பதுக்கியிருந்த இருவர் கைது. மாட்டுத்தாவணி E 5, காவல்நிலையம் போலீசார் நடவடிக்கை

மதுரை மாநகர் E5, மாட்டுத்தாவணி , காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமார் அவர்கள் .சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17 ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் சக காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை, வளர்நகர் ரிங் ரோடு சந்திப்பில் உள்ள SMR ஹோட்டல் அருகே சந்தேகப்படும்படியாக சாக்கு மூடைகளை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் காவலர்களை கண்டதும் சாக்குமூடைகளை போட்டு விட்டு தப்பியோட எத்தனித்தனர் ஆனால் சுதாரித்து கொண்ட காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது அதில் சட்ட விரோதன, மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட, குட்கா பொருட்களான கனேஷ் புகையிலை 57 1/2 கிலோ, கூல்லிப் 19 1/2 கிலோ, விமல் 5 கிலோ மற்றும் V1, 100 சிறிய பாக்கெட்டுகள் இருந்தது, அவர்களை பிடித்தூ விசாரித்ததில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை சேர்ந்த ரசாக் மகன் காதர் மைதீன் வயது 35/21, மற்றும் மதுரை மாலட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த மலைச்சாமி மகன் சிவா வயது 47/21, என தெரியவந்தது. இவர்களுக்கு இந்த பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டவை என தெரிந்தும், இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பதை நன்கு அறிந்திருந்தும் தங்களது சுய லாபத்திற்காக இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனை தொடர்ந்து இவர்களை கைது செய்து குட்கா பொருட்களை கைபற்றி நிலையம் அழைத்து வந்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்கள் விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.