இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை, வேதக் கோவில் நடுத்தெருவை சேர்ந்த, தேவராஜ், என்பவரின் மகன் அருள் ஜெயராஜ் என்ற கோழி அருள் வயது 42 மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது. இவர் கடந்த வருடம் இரு சமுதாயத்தினர்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும், பொதுஜன அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசி ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்து வந்த இவரை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் பொதுஜன அமைதியை சீர் குலைத்து வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 28.08.2021 இன்று எதிரி அருள் ஜெயராஜ் என்ற கோழி அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.