தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமலிங்க மில் அருகில் முத்துராஜ் என்பவரிடம் 1,50,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
இதில் முத்துராஜ் என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் மேலும் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்கள் என தனிப்படையினர் தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்தனர்
இரகசிய தகவலின் அடிப்படையிலும் தொடர் கண்காணிப்பில் இருந்தபோது இந்த துரித நடவடிக்கையானது எடுக்கப்பட்டது.