Police Department News

கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட் தீபக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப் பட்டார்.

தமிழகம் – கேரளாவின் எல்லைப் பகுதியில், சத்தியமங்கலம் சிறப் புக் காவல் படை, நக்சல் தடுப் புப் பிரிவு காவல் துறையினர் எஸ்.பி மூர்த்தி தலைமையில் கடந்த 9-ம் தேதி ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேடப்பட்டு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (எ) சந்துரு (31) பிடிபட்டார். தப்பிக்க முயற்சித்தபோது, அவரது காலில் அடிபட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், சிறப்புக் காவல் படை ஆய்வாளர் ஜான் அளித்த புகாரின்பேரில், தீபக் மீது தடாகம் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தீபக் பிடிபட்ட தகவலறிந்த சத்தீஸ்கர் மாநில போலீஸ் குழுவினர், கோவைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடந்த 19-ம் தேதி கோவை அரசு மருத்துவ மனையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு தீபக் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், ‘மாவோயிஸ்ட் தீபக் நாட்டுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை கைது செய்து சிறை யில் அடைக்க உத்தரவிட வேண்டு மென, மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணியிடம் காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார் கருத்துரு அனுப்பி பரிந்துரைத்தார்.

இதை ஏற்று, தேசிய பாது காப்புச் சட்டத்தில் தீபக்கை கைது செய்து சிறையில் அடைக்க, ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார்.

சத்தீஸ்கரில் விசாரணை

இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநி லம் சுக்மா மாவட்டத்தில் மாவோ யிஸ்ட் தீபக் மீது வழக்குகள் உள் ளன. அந்த வழக்கு விசாரணைக் காக, தீபக்கை அழைத்துச் செல்ல சுக்மா மாவட்ட நீதிமன்றத்தில் சத் தீஸ்கர் போலீஸார் ‘பிரிசன் டிரான்சிட் வாரன்ட்’ பெற்றனர். இந்த வாரன்ட்டை, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜிடம் சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் நேற்று அளித்தனர்.

இதையடுத்து, சத்தீஸ்கர் போலீஸாருடன் தீபக்கை ஒப்ப டைத்தனர். கோவையில் இருந்து விமானம் மூலமாக தீபக்கை நேற்று இரவு ஹைதராபாத்துக்கு சத்தீஸ்கர் போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சத்தீஸ்க ருக்கு அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.