Police Department News

134 பேருக்கு ‘அண்ணா பதக்கம்’ – முதல்வர் உத்தரவு

134 பேருக்கு ‘அண்ணா பதக்கம்’ – முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, ஊர்க் காவல் படை, விரல்ரேகை பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை சிறை காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்,

ஊர்க்காவல் படையில் உதவி படைத்தளபதி முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகை பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்வரின் அண்ணா பதக்கங்கள்’ வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தமிழக முதலமைச்சரின் வீரதீரச் செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம் மற்றும் தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி, 14.11.20 அன்று மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் இருந்து பல மனித உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றிய நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலத்த காயங்களுடன் தங்கள் உயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் கு.சிவராஜன் மற்றும் பெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீரதீரச் செயல்களுக்காக வழங்கப்படுகிறது.

மேற்கண்ட பதக்கங்கள் முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.