Police Department News

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

மதுரை மாவட்டத்திலுள்ள மது விலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல்நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பிரிவு 14(4) மதுவிலக்குச் சட்டம் 1937 பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு தானியங்கி உதவி பொறியாளர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட வல்லூனர் குழு அமைக்கப்பட்டது அக்குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து ஒவ்வொரு வாகனத்திற்கும் உரிய மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டு பட்டியல் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனில் சேகர், IAS அவர்கள் முன்பு சமர்பிக்கப்பட்டு அவர்களின் உத்தரவின்படி 13.09.2021 இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் மற்றும் தென் மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் காலை 10.30 முதல் 18.30 மணி வரை பொது ஏலம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு. ரமேஷ்பாபு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் மதுரை மாவட்டம் திரு. இளவரசன் காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல் பிரிவு மதுரை மாவட்டம் திருமதி விஜயா துணை ஆணையர் கலால் மற்றும் திரு. ரவீந்தரன் துணை இயக்குனர் அரசு தானியங்கி பணி மனை, மதுரை, ஆகியோர் உடனிருந்தனர்.

வாகனம் ஏலம் சம்பந்தமாக நாளேடுகள் மூலமாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது, மேற்படி ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்ட ஏலதாரர்களுக்கு, 195 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோ மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 203 வாகனங்கள் ரூபாய் 40 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஏலதாரர்கள் 17 ம் தேதிக்குள் ஏலத்தொகை வரி ஆகியவற்றை அனைத்தையும் செலுத்திய பிறகு வாகனங்கள் ஏலதாரர்களுக்கு விடுவிப்பு ஆணையுடன் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.