
அவதூறாக பேசி,மட்டையால் அடித்து,JCB வாகனத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம், கண்டிகைபேரியை சேர்ந்த நாகராஜன் வயது (28), என்பவர் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். நாகராஜனின் தந்தை தண்டாயுதபாணி ராமையன்பட்டி கண்டிகைபேரி அரசு புதுகாலனியில் உள்ள வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வாட்ச்மேன் வேலை செய்து பார்த்து வருகிறார்.மேற்படி தண்டாயுதபாணி, நாகராஜனை வேலாயுதத்திற்கு சொந்தமான காலி இடத்தை தூர்வார வரச் சொல்லியுள்ளார். நாகராஜன் தனது ஜேசிபி எடுத்துக்கொண்டு வேலாயுதத்திற்கான சொந்தமான காலி இடத்தில் தூர்வாரி கொண்டிருந்தபோது கண்டிகைபேரியை சேர்ந்த காளிமுத்து வயது 23, ஜீவாபார்வதி வயது19 மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவை சேர்ந்த அந்தோணிசாமி வயது (33), ஆகியோர் நாகராஜனை பார்த்து இந்த இடம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது உனக்கு தெரியாதா என அவதூறாக பேசி மட்டையால் அடித்து கல்லால் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நாகராஜன் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் விசாரணை மேற்கொண்டு நாகராஜனை தாக்கி மிரட்டல் விடுத்த மூவரில் அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.
