இன்றைய இளைய தலைமுறையினருக்கு,D.G.P. திரு. சைலேந்திரபாபு அவர்களின் அறிவுரை
ஒரு பணக்கார தொழிலதிபர் தன் குடும்பத்தோடு திரு.சைலேந்திரபு அவர்களை அவரது அலுவலகத்துக்கு சந்திக்க வந்திருந்தார், தன்னுடைய இருபது வயது மகள் தாழ்ந்த ஜாதிக்காரரோடு ஓடிப் போய்விட்டாள் என்ற புகாரோடு! அந்தப் பெண்ணின் செய்கையால் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயிருந்தது.இரண்டாவது சம்பவத்தில் தனியார் அலுவலக அதிகாரி என் அலுவகத்துக்கு வந்திருந்தார். தன்னுடைய இருபத்தி ஐந்து வயது மகள் விவாகரத்து பெற்ற 36 வயதுக்காரரை இரண்டாந்தாரமாகக் கட்டிக் கொண்டுவிட்டார் என்ற புகார் அவருக்கு. மகளுக்குத் திருமணமானதில் அவருக்கு வருத்தமில்லை, காதல் கல்யாணம் என்பதுகூட ஓகேதான்… ஆனால், போயும் போயும் இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்பட்டிருக்கிறாளே என்பதுதான் அவர் வேதனை!
மூன்றாவது சம்பவம், கோவையில் நடந்தது. மூன்றாவது சம்பவம், கோவையில் நடந்தது. அங்கிருந்து எனக்கு போன் செய்த ஒருவர் தேம்பித் தேம்பி அழுதார். அவருடைய மகளும் காதல் திருமணம் செய்ததுதான் பிரச்னை. அவருடைய மகள் திருமணம் செய்து கொண்டது இரண்டு கால்களையும் போலியோவால் இழந்து நிற்கும் மனிதருக்கு. கீழ் ஜாதிக்காரனைக் கட்டியிருந்தால்கூட கவலையில்லை. கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிச்ச பொண்ணு இப்படிப் பண்ணிட்டாளே என்பதுதான் அவருடைய கவலை.
என் மகளை எனக்கு மீட்டுத் தாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். போலீஸால் அந்த வேலையைச் செய்ய முடியாது. அந்தப் பெண்ணை அழைத்து வந்து பெற்றோருடன் பேச வைக்கலாம். அவர்கள் தான் தீர்த்துக் கொள்ளவேண்டும், இந்த சிக்கலை!
சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. சில பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறார்கள். சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
அன்பான இளம் தலைமுறையினரே… நான் காதலைத் தவறென்று சொல்லவில்லை. அதற்கு எதிரானவனும் அல்ல… காதல் திருமணம் செய்யக் கூடாது என்று அறிவுரை சொல்லவும் வரவில்லை. உங்கள் காதலையும் திருமணத்தையும் தீர்மானிக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்… ஏனென்றால், அதில் சம்பந்தப்பட்டிருப்பது பலருடைய சந்தோஷம்… ஏன் உங்களுடைய சந்தோஷமும்தான்!