Police Department News

மதுரை மாநகரில் நான்கு வழிப் பறி கொள்ளையர்கள் கைது! அவர்களிடமிருந்து 44 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்க நகைகள் 4 இரு சக்கர வாகனங்கள் மீட்பு

மதுரை மாநகரில் நான்கு வழிப் பறி கொள்ளையர்கள் கைது! அவர்களிடமிருந்து 44 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்க நகைகள் 4 இரு சக்கர வாகனங்கள் மீட்பு

மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திருப்பாலை, எஸ.எஸ்.காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில் வாகனங்களில் செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களது தங்க நகைகளை பறித்துச் செல்லும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த தொடர் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் குற்றப்பிரிவு துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு. ரவி அவர்கள் மற்றும், அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் தலைமையில் ஒரு தனிப்படையும், திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் மற்றும் கீரைத்துறை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்களின் தலைமையில மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக குற்றங்கள் நடந்த சம்பவ இடங்களில் இருந்த CCTV கேமராக்களின் பதிவுகளை ஆராயப்பட்டன. அதில் எதிகள் பற்றி கிடைத்த விபரப் பதிவுகளின்படி CCTV படங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் எதிரிகள் கண்டறியப்பட்டனர். மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வழிப்பறி குற்றவாளி மணி என்ற வைரமணி மற்றும் அவனது கூட்டாளி பாலசுப்பிரமணியன் இருவரையும் தல்லாகுளம் சரக தனிப்படை போலீசாரும், மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் மதன்குமார் மற்றும் சிவா ஆகியோரை திருப்பரங்குன்றம் சரக தனிப்படையினர் கைது செய்தனர்.

மேற்படி எதிரிகளான வைரமணி,மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் மதுரை மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களிலும், மதுரை மாவட்டம் சமயநல்லூர், மற்றும் திண்டுக்கலில் 4 செயின் பறிப்பு சம்பவங்களிலும், இரு சக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேற்படி எதிகளிடமிருந்து 33 லட்சம் மதிப்புள்ள 90 பவுன் தங்க நகைகள் கைபற்றப்பட்டன. அதே போன்று மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியை சேர்ந்த மதன்குமார் மற்றும் சிவா ஆகியோரிடமிருந்து 8 வழக்குகளில் தொடர்புடைய 11 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகள் கைபற்றப்பட்டன. மேற்படி நான்கு குற்றவாளிகளிடமிருந்து வழிப்பறி சம்பவங்களுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனங்களும் கைபற்றப்பட்டன.

இதில் முக்கிய குற்றவாளியான வைரமணி வழிப்பறியில் ஈடுபட்ட பணத்தில் ஆடம்பர சொகுசு பங்களா ஒன்று ம் மதுரை மாநகரில் கட்டிவருவதும் ஆந்திரா மாநிலம் சென்று இரு சக்கர வாகன பந்தய பயிற்சி எடுத்து வருவதும் ரகசிய விசாரணையில் தெரிய வந்தது.

மேற்படி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குகளில் பறி போன சுமார்44 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்க நகைகளையும். குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களையும் கைபற்றிய தனிப்படை போலீசாரை மதுரை மாநகர ஆணையர் மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஆகியோர் வெகுவாக போராட்டினர்.

மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய CCTV கேமராக்களின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக இருந்தன. மேலும் காவல் ஆணையர் அவர்கள் CCTV கேமராக்களின் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி அறிவுறித்தி, மாநகர காவல் அதிகாரிகளை பொது மக்களின் ஒத்துழைப்புடன்
பொது இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் CCtv கேமராக்கள் பொருத்துவதற்கு அறிவுரை வழங்கி வருவதன் பேரில் இதுவரை மதுரை மாநகரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட CCTV கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் குற்றச் சம்பவங்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பொருட்டு தங்கள் வசிக்கும் இடம் வணிக நிறுவனங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்தும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.