இடைவிடாத மழையிலும், கடும் பசியிலும், சிலர் தொந்தரவுகளுக்கு இடையிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பணியாற்றிய காவல்துறையிடம் அட்டகாசம் செய்த நபர்களை வீடியோவை ஆதாரமாக வைத்து கைது செய்ய உத்தரவு…!!
தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு , சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை,வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களை
மரியாதை செலுத்த, தனியார் வாகனங்களில் அனுமதி பெற்று சென்றனர்.
இளைஞர்கள் சிலர் வாகனங்களில்
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட
அளவுக்கதிகமாக வாகனத்தின் கூரையின்
மீதேறி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
அதுமட்டுமின்றி ஒரு சில குடிகார நாய்கள் காவல்துறை வாகனங்ளை நடுவழியில் மறித்து, அதில் ஏறி மேலே நின்று ஆடி வாகனங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தினர்.
ஓரிரு இடங்களில் அரசு பேருந்து கண்ணாடிகளும்
உடைக்கப்பட்டனர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
காவலர்கள் முன்னர், இழிவான ஆபாசமாக பேசி நக்கலடித்துள்ளனர், பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றனர்.
இந்நிலையில் வீடியோ காட்சி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுத்து, கைது செய்ய காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.