Police Department News

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்குகள் பதிவு!

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்குகள் பதிவு!

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தினை தமிழக அரசு அறிவித்திருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதே போல் உச்ச நீதி மன்றமும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பான வழக்கில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க வாங்க வெடிக்க தடை விதித்திருந்தது. சரவெடி உள்ளிட்ட வெடிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் போலீசாரே பொறுப்பேற்க வேண்டும் இந்த உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதி மன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இது வரை 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், கீழ் பாக்கம் அயனாபுரம், டி.பி. சத்திரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.