கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 128 நபர்கள் அதிரடி கைது.
02:11:2020 தென்காசி மாவட்டம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை சீரழிக்கும் கஞ்சா,மது, குட்கா,புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு,விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள் 05 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டு 11 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.170 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 117 வழக்குகள் பதிவு செய்து 117 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1091 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.