சென்னை பெரு நகர காவல் ஆணையர் அவர்கள், காவல் ஆளினர்களுக்கு ஓர் வேண்டுகோள்
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில் காப்பீடு தொகையுடன் கூடிய
வங்கி கணக்கு ஒன்றை துவங்கி பயன்படுத்தி வருகிறார்கள்
சமீபத்தில் சென்னை பெருநகர ஆயுதப்படையை சேர்ந்த ஒரு காவலர் சென்னை ராமாபுரம் ஆக்ஸீஸ் பேங்க் கிளை ஒன்றில் வங்கி கணக்கு வைத்துள்ளார், மேற்படி காவலர் 28.02.2020, அன்று வாகன விபத்தில் இறந்துள்ளார். மேற்படி காவலர் காப்பீட்டு தொகை 30 லட்சம் பெற தகுதியுள்ளவராக இருந்துள்ளார், அவருடைய தந்தை காப்பீட்டு தொகையை பெறுவதற்காக ஆக்ஸீஸ் வங்கி கிளை மேலாளரை அனுகியுள்ளார் வங்கி மேலாளரும் தக்க ஆவணங்களுடன் வரும்படி ஆலோசனை வழங்கி அனுப்பியுள்ளார். இறப்பு காப்பீட்டு தொகையை பெறுவதற்கான தக்க ஆவணங்களை சேகரித்து 60 நாட்களுக்கு பிறகு வங்கி மேலாளரிடம் சமர்பித்துள்ளார். ஆனால் வங்கி கிளை மேலாளர் காலதாமதமாக இறப்பு ஆவணங்களை சமர்பித்ததால் இழப்பீட்டு தொகை பெறுவதற்கு தகுதியற்றது என தள்ளுபடி செய்துள்ளார்.
காவல் துறையில் பணி புரியும் அனைத்து காவல் ஆளிநர்களும் காப்பீடு பற்றிய அனைத்து விபரங்களையும் அதனை எப்படி பெறுவது என்ற விபரங்களையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் அது பற்றி தெரியாதவர்களுக்கு எடுத்துரைத்து புரிய வைக்க வேண்டும் மற்றும் காவல் ஆளிநர்களிடையை சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல் ஆய்வாளர்கள், வரிசை அழைப்பில் இது பற்றி எடுத்துரைத்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைப்பு ஆய்வாளர்கள் ( Nodal officers ) அவர்கள் பொறுப்பிலுள்ள காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு பெருநகர காவல் ஆணையர் கூறினார்.