மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் S. ஒய்ஸ்லின், மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், 7 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன காணமல் போன வழக்குகளின் புகார்களில் அக்டோபர் மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலைய மூலம் ரூ- 15, 80,598/- மதிப்புள்ள 111 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களால் நேற்று 11.11.2021 ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.
சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் இந்த ஆண்டு இதுவரை ரூபாய் 64,13,853 /- மதிப்புள்ள 511 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது
மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த சைபர் குற்ற வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று மாதங்களில் ரூ- 5,51,500/- மற்றும் இதுவரை ரூபாய் ரூ-23,97,636/- உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபோன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்கவும் ரகசிய எண், வங்கி கணக்கு எண், OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். என்றும் யாரேனும் ஏமாற நேர்ந்தால் 155260 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம், என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.