மதுரை மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி உள்ள கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தனி படையினரின் சீரிய முயற்சியினால் மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி இருந்த கோவில் உண்டியல் திருட்டு உட்பட 9 வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாலமுருகன் த/பெ குருசாமி, சோளங்குருணி மற்றும் முனியசாமி தா/பெ மகாலிங்கம் காரியாபட்டி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகை அரை பவுன், பணம் ரூபாய் 20000 மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி இரண்டு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் தாக்கலான வழக்குகளை கண்டுபிடித்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் மதுரை மாவட்டத்தில் தாக்கம் வழிப்பறி களவு போன்ற வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்