மதுரையை சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் தங்கப்பாண்டி வயது 23/2021 என்பவர் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் இதனால் இவர் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்ததில் இவர் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு குந்தாகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே மதுரை செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தீரு. மாடசாமி அவர்களின் பரிந்துரையின்படி மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி 29.11.2021. அன்று தங்கப்பாண்டியை மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டடார்.