சென்னை:-
தாம்பரம் காவல் ஆணையரக செய்திக் குறிப்பு.
பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1.1.2022 அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர் ஓட்டேரி கூடுவாஞ்சேரி கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் அடங்கும்.
அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களும் சென்னை மாநகர மேற்கு மண்டலத்தில் இருந்து குன்றத்தூர் காவல் நிலையமும் அடங்கும்.
சென்னை மாநகர தெற்கு மண்டலத்தில் இருந்து தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர் நகர் பீர்க்கன்காரணை செம்மஞ்சேரி கண்ணகி நகர் பெரும்பாக்கம் சேலையூர் சிட்லபாக்கம் பள்ளிக்கரணை கானாத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளடக்கியதாகவும்.
மேலும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டது அதனைத்தொடர்ந்து தற்போது முதல் தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கி மிகச்சிறப்பாகவும் துரிதமாகவும் செயல்பட்டு வருகின்றது.
குற்றநடவடிக்கையைதடுக்கும் விதமாக பிரத்யேக கைப்பேசி எண்களான 8525007100 என்ற தொலை பேசி எண்ணிற்கு பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்பட்ட பொதுமக்களின் புகார்கள் உடனடியாக விசாரிக்கப்படும் என்று தாம்பரம்
காவல் ஆணையர் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.