Police Department News

நற்செயல்கள் மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்.

நற்செயல்கள் மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்.

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை மாநகர ஆணையர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆணைக்கிணங்க போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பாக COVOID 19 கொரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களுக்கு நன்மையான செயல்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். குரோம்பேட்டை _2 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் திரு.பாலாஜி மற்றும் சக காவலர்கள் அவர்கள் குரோம்பேட்டை சரவணாஸ்டோர் எதிரில் காலை முதல் வாகனசோதனையில் ஈடுபடுகின்றனர் அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகளிடம் அரசு உத்தரவுபடி முதலில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சட்டம் சம்பந்தமான அறிவுறை வழங்குகிறார். முககவசம்,அடையாள அட்டை இருக்கிறதா என்று சரிபார்க்கபட்டு பின்பு வாகனம் செல்ல அனுமதிக்கின்றனர். வாகன ஓட்டகளான பெண்களிடமும் மிகவும் மரியாதையாகவும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கனிவாக கொரோனா விழிப்புணர்வு பற்றி மனிதாபிமான செயல்கள் மட்டுமே செய்து வருகிறார்.144 தடையைமீறி அரசு அனுமதித்த காரணங்கள் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்கின்றனர்.இப்படி குரோம்பேட்டை _2 போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பாலாஜி அவருடன் பணிபுரியும் சக காவலர்களும் தன்னலம் கருதாமல் குடும்பத்தை மறந்து மழை,வெயில், குளிர் என்று பாராமல் உடலிலும் மனதிலும் அனைத்து வலிகளையும் அவமானங்களையும் ஏற்றுக்கொண்டு பொதுமக்களுக்காக அனைத்து நன்மையான காரியங்கள் ஆலோசனை அறிறைகளையும் மட்டுமே செய்து வருகின்றனர். இப்படி குரோம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு .பாலாஜி அவர்கள் நற்செயலாகவே மக்களுக்கு பணியாற்றி வருகிறார்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக T.பிரபு தென்சென்னை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.