Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் பூட்டிய வீட்டில் ரூ.6 லட்சம் மற்றும் நகைகள் கொள்ளை

மதுரை செல்லூர் பகுதியில் பூட்டிய வீட்டில் ரூ.6 லட்சம் மற்றும் நகைகள் கொள்ளை

மதுரை செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்தவர் காசிமாயன் லோடு மேனாக வேலைபார்த்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார் இவருக்கு மேகலா வயது 37/22, என்ற மனைவியும் 2 மகன்களும் 19 வயதுடைய மகளும் உள்ளனர்.ஒரு மகன் தனியார் நிறுவனத்திலும் இன்னொரு மகன் லோடு மேனாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் காசிமாயனின் இன்சூரன்ஸ் பணம் 8 லட்சம் கடந்த 10 ம் தேதி வங்கி கணக்கிற்கு வந்தது. அந்த பணத்தில் 2 லட்சத்தை எடுத்த மேகலா அதனை வைத்து சிறு சிறு கடன்களை அடைத்தார்.மீதம் உள்ள 6 லட்ச ரூபாயை பீரோவில் வைத்திருந்தார். அந்த பணத்தில் நகைககள் வாங்கி மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்திருந்தார். அதற்கு முன்பாக பழனிக்கு பாதயாத்திரை சென்று திரும்பிய பிறகு மகளின் திருமன காரியத்தை ஆரம்பிக்கலாம் என்று குடும்பத்தார் முடிவெடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மேகலா கடந்த 14 ம் தேதி மாலை கதவை பூட்டி விட்டு பழனிக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை கிளம்பி சென்றனர்.இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் முன் கதவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 6 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்து தப்பினர்.கடந்த 18 ம் தேதி மேகலா வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் முன் பக்க கதவை திறந்து பார்த்த போது ரூபாய் 6 லாட்சம் மற்றும் நகைகள் திருடு போயிருப்பது தெரிந்தது.இது தோடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி வேதவள்ளி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாராணை செய்து வருகிறார்கள்.மேகலாவின் வீட்டில் 6 லட்ச ரூபாய் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. எனவே உறவினர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது அண்டை வீட்டில் வசிப்பவர்கள் கைவரிசையா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.