மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.
மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் அம்மாபட்டி கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்முகாமில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி IPS., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்தும்,
பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், எந்தெந்த வகையில் தடுக்கலாம் என்பது குறித்தும்,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்தும்,
பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் எந்த வகையில் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது குறித்தும்,
பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதில் பெற்றோர்களின் பொறுப்பு குறித்தும்,
குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும்,
பெண் குழந்தைகளுடைய கவனம் எந்தெந்த வகையில் திசை திருப்பப்படுகிறது என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும்,
பாலியல் குற்றங்கள் நிகழும்போது அதனை தடுப்பது குறித்தும் மதுரை சரக டிஐஜி அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
முன்னதாக பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர்களின் பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திரு. சந்திரமௌலி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, திரு சிவக்குமார் காவல் துணை கண்காணிப்பாளர் திருமங்கலம் உட்கோட்டம் அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.